சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதம்: சாதனையை சமப்படுத்தினார் ரோஹித் சர்மா - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-22

சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதம்: சாதனையை சமப்படுத்தினார் ரோஹித் சர்மா

சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதம்: சாதனையை சமப்படுத்தினார் ரோஹித் சர்மா




சர்வதேச இருபதுக்கு 20 போட்டி ஒன்றில் குறைந்த பந்துகளில் சதமடித்த சாதனையை இந்தியாவின் ரோஹித் சர்மா சமப்படுத்தியுள்ளார்.

35 பந்துகளில் சதமடித்த அவர் தென் ஆபிரிக்காவின் டேவிட் மிலரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மத்திய பிரதேஷின் ஹொல்கார் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதற்கமைய, ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியது.
இவர்கள் ஆரம்பம் முதலே அதிடியாக ஓட்டங்களை விளாசி இலங்கையின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

ரோஹித் சர்மா சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார்.

43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைக் குவித்தது.

261 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட் 36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

ஆனாலும், உபுல் தரங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஜோடி 53 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை அளித்தது.

உபுல் தரங்க 47 ஓட்டங்களுடனும், குசல் ஜனித் பெரேரா 37 பந்துகளில் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

எனினும், அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் இலங்கை அணியின் நிலை பரிதாபமானது.

3 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
17.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுடன் இலங்கை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பந்துவீசும் போது உபாதைக்குள்ளான அஞ்சலோ மெத்யூஸ் இறுதிவரை களமிறங்கவில்லை.

88 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி 2 -0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages