மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-31

மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவிப்பு

மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவிப்பு



சர்வதேச டென்னிஸ் போட்டியொன்றில் மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான டென்னிஸ் நிரற்படுத்தலில் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த செரீனா வில்லியம்ஸ் சில காலங்கள் போட்டிகளில் பங்குபற்றாமல் ஓய்வில் இருந்தார்.

அவர் தனது முதல் குழந்தையை பிரசவித்தமையே அதற்கான காரணமாகும்.

எவ்வாறாயினும் செரீனா வில்லியம்ஸ் முவாடலா டென்னிஸ் தொடரில் விளையாடி முதல் சுற்றில் வெற்றியையும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாடுவதை செரீனா வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் சர்வதேச அரங்கிற்கு பிரவேசித்தமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

23 கிரேன்ட்ஸ்லாம் கிண்ணங்களை சுவீகரித்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் திகழ்கின்றார்.

ஓராண்டில் நடைபெறும் நான்கு கிரேண்ட்ஸாம்களில் முதலாவதான , அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் செரீனா வில்லியம்ஸ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages