'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில் - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-26

'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில்

'பொக்ஸிங் டே' டெஸ்ட் ஆஸி. - இங்கிலாந்து இன்று களத்தில்



அவுஸ்­தி­ரே­லிய – - இங்­கி­லாந்து அணிகள் மோதும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்­போர்னில் இன்று தொடங்­கு­கி­றது.

ஜோ ரூட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 5 போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது. 
இதில் முதல் மூன்று டெஸ்ட்­களில் அவுஸ்­தி­ரே­லிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கிண்­ணத்தை மீண்டும் வசப்­ப­டுத்தி விட்­டது. 

இந்த நிலையில் அவுஸ்­தி­ரே­லிய –- இங்­கி­லாந்து அணிகள் மோதும் 4ஆ-வது டெஸ்ட் போட்டி மெல்­போர்னில் இன்று தொடங்­கு­கி­றது. 

இது ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அழைக்­கப்­ப­டு­வது சிறப்பு அம்­ச­மாகும்.

‘பொக்ஸிங் டே’ என்றால் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குத்­துச்­சண்­டையில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடை­யாது. 

ஆஸி., இங்­கி­லாந்து, நியூஸி. போன்ற மேலை­நா­டு­களில் கிறிஸ்­மஸ் பண்­டிகை அன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களின் முன்பு பெரிய பெட்டியொன்றை வைப்­பார்கள். 

ஆல­யத்­திற்கு வரு­ப­வர்கள் அதில் நன்­கொடை வழங்­கு­வார்கள். 

மறுநாள் (டிசம்பர் 26) அந்த பெட்­டியை பிரித்து அதிலுள்ள பணம், பரி­சுப்­பொ­ருட்களை ஏழை எளி­யோ­ருக்கு வழங்­கு­வார்கள். பெட்டியை திறக்கும் அந்த நாளை ‘பொக்ஸிங் டே’ என்­கி­றார்கள்.

முன்பு கிறிஸ்­மஸ் பண்­டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட கூலித்­தொ­ழி­லா­ளர்கள் மறுநாள் தான் தங்­க­ளது குடும்­பத்­தி­னரை பார்க்க செல்­வார்கள். 

அப்­போது அவர்­க­ளது முத­லா­ளிகள் கிறிஸ்மஸ் பெட்­டியை பரி­சாக கொடுத்து அனுப்­பு­வது வழக்கம். 

அதன் அடை­யா­ள­மா­கவும் ‘பொக்ஸிங் டே’ என்ற பெயர் வந்­த­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

1951-ஆம் ஆண்டு முதல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ‘பொக்ஸிங் டே’என்ற பெய­ருடன் டெஸ்ட் போட்டி நடத்­தப்­பட்டு வரு­கி­றது. 

சில கார­ணங்­களால் குறிப்­பிட்ட ஆண்­டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்­டியை நடத்த முடி­ய­வில்லை. 
இதன் பிறகு 1980ஆ-ம் ஆண்டு முதல் ஒவ்­வொரு ஆண்டின் இறு­தி­யிலும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்டை நடத்தும் உரி­மையை அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் சபை பெற்று வருகிறது.

 அந்தவகையில் இன்று ஆரம்பமாகும் 'பொக்ஸிங் டே' டெஸ்டில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages