இந்தியாவிடம் தோற்றது இலங்கை - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-21

இந்தியாவிடம் தோற்றது இலங்கை

இந்தியாவிடம் தோற்றது இலங்கை 


இந்திய அணிக்கு எதிரான முதலாவது  இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை 93 ஓட்டங்களால் தோல்வியடைந்து 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் இந்திய அணி  1-0 என முன்னிலை பெற்றுள்ளது.


இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்டு இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இப் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்து.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5 ஆவது ஓவரில் மெத்தியூஸின் பந்து வீச்சில் ரோகித் சர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.

ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை வீசிய பிரதீப் ஐயரை ஆட்டமிழக்கச் செய்தார். 24 ஓட்டங்கள் எடுத்த ஐயர் பெவிலியன் திரும்ப தோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15 ஆவது ஓவரில் 61 ஓட்டங்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார்.



இறுதி கட்டத்தில் துடுப்பெடுத்தாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை எட்டியது. 

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் மெத்தியூஸ்,பெரேரா,விஸ்வா பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இலங்கை அணி சார்பாக விஸ்வா பெர்ணான்டோ தனது கன்னி இருபதுக்கு 20 போட்டியில் களமிறங்கினார்.

இதையடுத்து 181 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டையும் இழந்து 93 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீர்ர்களாக களமிறங்கிய தரங்க 23 ஓட்டங்களையும் திக்வெல்ல 13 ஓட்டங்களையும் பெற்றபோது ஆட்டமிழந்தனர். 

இலங்கை அணிக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா 19 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இந்திய அணி சார்பாக சகால் 4 விக்கெட்டையும் பாண்டியா 3 விக்கெட்டையும் யாதேவ் 2 விக்கெட்டையும் உன்கந்த் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தியா - இலங்கை அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடர்களை இந்தியாவிடம் இழந்தது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெறும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages