130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-03

130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு

130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு



சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான 30 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் குவாங்சு நகரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் முட்டை படிமங்கள் இருந்த பாறைகளை எடுத்தனர்.

இந்த முட்டைகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாகும் பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர்.

இதன் மூலம் இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிப்பு கொண்டுள்ளது.

இந்த முட்டைகளை ஆய்வு செய்வதற்காக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் இப்பகுதியில் முட்டைகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages