கௌட்டாவில் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!!! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-27

கௌட்டாவில் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!!!


சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் தினமும் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கிழக்கு கௌட்டாவிலுள்ள பொதுமக்கள் இன்று முதல் வெளியேறுவதற்கான மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனிதாபிமான யுத்தநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷொய்கு  அந்நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தினமும் மோதலை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.


இந்நிலையில் பொதுமக்கள் தப்பிச்செல்வதற்கு சிரிய செம்பிறைச்சங்கம் உதவுமெனவும் இது தொடர்பாகத் துண்டுப்பிரசுரங்கள் குறுஞ்செய்தி மற்றும் காணொளி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் ஷொய்கு  கூறியுள்ளார்.

கிழக்கு கௌட்டாவில் கடந்த வாரம் முதல் இடம்பெற்றுவரும் மோதலில் சுமார் 560 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கௌட்டாவில் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் 30 நாள் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க ஐ.நா. பாதுகாப்புச்சபை வலியுறுத்தியிருந்தது. 

இருப்பினும் யுத்தநிறுத்த அறிவிப்புக்கு மத்தியில்  அப்பகுதியில் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து 5 மணிநேரத்துக்கு தாக்குதலை நிறுத்த ரஷ்யா அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages