அமெரிக்காவின் இராணுவ செலவில் பாரிய அதிகரிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-14

அமெரிக்காவின் இராணுவ செலவில் பாரிய அதிகரிப்பு



அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அமெரிக்க இராணுவத்திற்கு ஆயிரக்கணக்கான துருப்புகளை இணைப்பது உட்பட 10 வீதத்திற்கும் அதிகமான செலவுகளை அதிகரிக்கும் 2019 நிதியாண்டுக்கான பாரிய வரவு செலவு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி 2017 ஆம் ஆண்டு 612 பில்லியன் டொலர்களாக இருந்த செலவு திட்டம் 686 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாய திட்டம் என கூறியே பென்டகன் புதிய பட்ஜட்டை பரிந்துரைத்துள்ளது. 

எனினும் இதற்கு முரணாக இராஜாங்க திணைக்கள பட்ஜட்டில் உதவி மற்றும் இராஜாங்க செலகளில் பெரும் வெட்டு விழுந்துள்ளது.

சீனா மற்றும் ரஷ்யாவுடனான புதிய வல்லரசு போட்டியில் இராணுவத்தின் அளவை அதிகரிப்பது, புதிய கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் தயார்நிலையை மேம்படுத்த வேண்டி இருப்ப தாக பென்டகன் தலைவர் ஜிம் மட்டிஸ் எச்சரித்துள்ளார். 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்் நிர்வாகத்தின் வரவு செலவு திட்டத்தில் 25,900 மேலதிய துருப்புகளை இணைப்பது, விமானம், கப்பல்கள், தரைவழி பாதுகாப்பு முறை மற்றும் ஏவுணை பாதுகாப்பில் பெரும் முதலீடு செய்ய கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages