மீதொட்டமுல்ல குப்பை மேடு ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-07

மீதொட்டமுல்ல குப்பை மேடு ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை


கொலன்னாவ - மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்தமையினால், ஏற்பட்ட சேதங்கள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சந்ரதாஸ நாணயக்கார ஜனாதிபதியிடம் அறிக்கையை New;W சமர்ப்பித்தார்.

குப்பை மேட்டை அகற்றுவதற்கான குறுங்கால - நீண்டகால பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றுவதற்காக 2015ஆம், 2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளது. 

2014ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபை இதற்கென 64 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. 

2015ஆம் ஆண்டு இந்தத் தொகை 182 வரை அதிகரித்ததோடு, 2016ஆம் ஆண்டில் 232 மில்லியன் ரூபா வரை அதிகரித்திருப்பதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாநகரசபை கழிவகற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும், தீர்வு வழங்குவதற்காக யோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்தாமையுமே விபத்துக்கான காரணம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages