இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த 2 ஆவது ரோந்துக்கப்பல் இலங்கை வந்தது - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-27

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த 2 ஆவது ரோந்துக்கப்பல் இலங்கை வந்தது



இலங்கை கடற்படையின்  கடலோர பாதுகாப்பு பணித் தேவைக்காக கோவா (Shipyard Limited (GSL) இல் நிர்மாணிக்கப்பட்ட  இரண்டாம்  கடல்வழி ரோந்துக்கப்பல்  (AOPV)  கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. 

இவ்வாறு வந்தடைந்த  ரோந்துக்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். 

இந்த கரையோர பாதுகாப்பு  கடற்படையின் சமீபத்திய கப்பல், தளபதி சமன் பெரேரா மற்றும் 18 அதிகாரிகளும் 100 கடற்படை உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. 

கடற்படை  தளபதி வைஸ் அட்மிரல்  சிரிமேவன்  ரணசிங்க, கடற்படைத் தளபதிகளின் தலைமை பணிப்பாளர் ரையர் அட்மிரல் பியால் டி சில்வா,  மேற்கு கடற்படைப் தளபதி  ரையர் அட்மிரல் நிஷாந்த 

உளுகெட்டென்னே, கடற்படை செயலாளர் மற்றும் கடற்படை தளபதியின் செயலாளர், அட்மிரல் விஜித மெட்டெகோடா, மேற்கு கடற்படைத் தளபதியின் மூத்த கடற்படை அதிகாரிகள் ஆகியோர் இந்த புதிய கப்பலை பார்வையிட்டதுடன் அடுத்த வாரம் இந்த கப்பலுக்கான இலங்கை பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages