இன்றைய இரண்டாவது போட்டியில் வெல்லப்போவது இலங்கையா? பங்களாதேஷா? - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-10

இன்றைய இரண்டாவது போட்டியில் வெல்லப்போவது இலங்கையா? பங்களாதேஷா?



சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரின் மூன்­றாது லீக் ஆட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

இப் ­போட்­டியில் இலங்­கை அணியும் பங்­க­ளாதேஷ் அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. ஏற்­க­னவே முதல் போட்­டியில் இந்­திய அணியை வீழ்த்­திய உற்­சாக மிகு­தியில் உள்ள இலங்கை அணி இன்­றைய போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணியை வீழ்த்தி புள்­ளிகள் பட்­டி­யலில் முத­லி­டத்தில் நீடிக்­கவே எத்­த­னிக்கும்.
இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நடத்தும் சுதந்­திரக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்­ப­மா­னது.
இத் தொடரில் இலங்­கை­யுடன் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் விளை­யாடி வரு­கின்­றன.
இத் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தி­யி­ருந்­தன.
இப் போட்­டியில் குசல் ஜனித் பெரே­ராவின் ருத்­­ர­தாண்­ட­வத்தால் இலங்கை அணி அபார வெற்­றியைப் பெற்­றது.
இந்­நி­லையில் முதல் போட்­டி­யி­லேயே தோல்­வி­ய­டைந்த விரக்­தியில் இருந்த இந்­திய அணி நேற்­று­ முன்­தினம் தனது இரண்­டா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை எதிர்த்­தா­டி­யது.
இப் போட்­டியில் ஆறு விக்­கெட்­டுக்­களால் இந்­திய அணி வெற்­றி­பெற்று புள்­ளிகள் பட்­டியலில் இரண்­டா­மி­டத்தைப் பிடித்­துக்­கொண்­டது.
இந்­நி­லையில் இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் இன்று தமது இரண்­டா­வது போட்­டியில் மோது­கின்­றன.
நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு வெற்­றி­களைக் குவித்து வரும் இலங்கை அணி இன்­றைய போட்­டி­யிலும் வெற்­றி­பெறும்
 நம்­பிக்­கையில் கள­மி­றங்­கு­கின்­றது.
அதேபோல் மறு­மு­னையில் பயிற்­சி­யா­ளரை இழந்து, இப்­போது தலை­வரையும் இழந்து இக்­கட்­டான நிலையிலுள்ள பங்­க­ளாதேஷ் அணி கடந்த போட்­டியில் இந்­திய அணிக்கு சற்று நெருக்­கடி கொடுத்தே ஆடி­வந்­தது.
அதனால் இலங்­கைக்ெகதி­ரான போட்­டி­யிலும் பங்களாதேஷ் அணி சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் பங்களாதேஷ் அணி முதல் வெற்றியை ருசிக்குமா அல்லது இலங்கையிடம் வீழுமா என்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages