பெரு ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தார் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-22

பெரு ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தார்


பெரு ஜனாதிபதி பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரேசிலிய கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டது என்ற ஊழல் குற்றச் சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாண ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அது தொடர்பான இரகசிய காணொளி ஒன்றும் வௌியாகியுள்ளது.
அவர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு தாம் ஒரு போதும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே தமது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.


கடந்த 2016 ஜூலை பெருவின் 66 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவர் 19 மாதங்களே ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார்.

ஏற்கனவே 10 வருடங்களின் முன்னர் அவர் அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு ஒன்றிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் தப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages