மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-31

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு


மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது.

இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது.

இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
12 புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும்.

மேலும், புற்று நோயை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages