இலங்கை இறப்பரை இறக்குமதி செய்ய தயார் -ஸ்லோவாக்கியா நிதியமைச்சர் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-31

இலங்கை இறப்பரை இறக்குமதி செய்ய தயார் -ஸ்லோவாக்கியா நிதியமைச்சர்


கார் உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என்று ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் [Peter Kazimir] தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

இதுதொடர்பில் அமைச்சர் கருத்துதெரிவிக்iயில், இறப்பர் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடுகளில் இலங்கையும் ஒன்று . 

இலங்கைக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான வருடாந்த வணிகத்தின் பெறுமதி நான்கரைக் கோடி டொலரைத் தாண்டுகிறது. 

இதனை மென்மேலும் அதிகரிக்க ஸ்லோவாக்கியாவிற்கான இறப்பர் இறக்குமதி வழிவகுக்கும் என்று அமைச்சர்; தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை வலுவூட்டுவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages