உலகின் மிகப்பெரிய டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-04-05

உலகின் மிகப்பெரிய டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு




உலகின் மிகப்பெரிய டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து அருகில் உள்ள ஸ்கை தீவுக் கூட்டத்தில் இந்த காலடித்தடம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பொலிவியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த காலடித்தடம் அளவில் மிகப்பெரியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட காலடித்தடங்கள் கற்களாக மாறியிருப்பதாகவும், அவற்றின் வயது சுமார் 170 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூராசிக் காலத்தின் மத்திய பகுதியில் வாழ்ந்த டி-ரெக்ஸ் (T-Rex) எனப்படும் இந்த வகை டைனோசர்களின் காலடித்தடம் வெவ்வெறு அளவுகளில் கிடைத்திருப்பதால், வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் புரூசாட் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages