வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் குறித்து பேச்சுவார்தை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-04-19

வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் குறித்து பேச்சுவார்தை


வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவுடனான பேச்சுவாரத்தை வெற்றிகரமானதாக அமையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார் இந்த முயற்சி வெற்றியளித்தால் வடகொரியா மற்றும் சர்வதேசத்திற்கே இது பாரிய வெற்றியாக அமையும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகொரியா அணுவாயுத செயற்பாடுகளை கைவிடும் வரை அமெரிக்கா தொடர்ந்தும் வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் அணுவாயுதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே அமெரிக்காவின் நோக்கம் எனவும் ட்ரம்ப் பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அமெரிக்கர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர அமெரிக்கா மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றது.

இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியளிக்காவிடின் அவருடனான பேச்சுவாரத்தையிலிருந்து வௌியேறுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages