பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் கதறல்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-06-20

பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் கதறல்கள்


அமெரிக்காவிற்குள்  சட்டவிரோதமாக நுழைய  முயன்றவேளை எல்லையில் வைத்து பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் கதறல்களை வெளிப்படுத்தும் ஓலிநாடாவொன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பெற்றோருடன் சேர்ந்து நுழைய முயன்ற சுமார் 2000 குழந்தைகளை அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஐக்கியநாடுகள் கண்டித்துள்ளது.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்கா குடியேற்றவாசிகளின் முகாமாக மாறுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இந்த ஓலிநாடா வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட ஓலிநாடாவில் சிறுவர்கள் அழுவதையும் கதறுவதையும் கேட்க முடிகின்றது.

அமெரிக்கா சிறுவர்களை தடுத்துவைத்துள்ள இரகசிய முகாமிற்குள் நுழைந்த குழுவொன்று இந்த ஓலிநாடாவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா இந்த இரகசிய முகாம்களிற்குள் எவரும் நுழைவதற்கு அனுமதி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட ஓலிநாடாவை பதிவு செய்தவர் தான் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமா  தன்னை பற்றிய விபரங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துள்ளார்.

அவர் இந்த ஓலிநாடாவை குடியேற்றவாசிகள் விடயத்தில் தீவிர அக்கறை காண்பிக்கும் பிரபல சிவில் உரிமை சட்டத்தரணியொருவரிடம் வழங்கியுள்ளார்.

ஓலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட குரல்களிற்கு சொந்தமான குழந்தைகள் ஆறு முதல் பத்து வயதுடையவர்களாகயிருக்கலாம் அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்னரே பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கவேண்டும் என தெரிவிக்கும் அந்த நபர் தூதரக அதிகாரிகள் சொக்லட்களையும் விளையாட்டுப்பொருட்களையும் கொடுத்து அவர்களை ஆறுதல் படுத்த முயல்கின்றர் ஆனால் அது முடியவில்லை என தெரிவித்துள்ளார்

குறிப்பிட்ட ஓலிநாடாவில் எல்சல்வடோரை சேர்ந்த ஆறு வயதுசிறுமி தனக்கு தனது உறவுக்கார பெண்மணியின் தொலைபேசி இலக்கம் தெரியும் எனவும் அவரை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages