சாலையில் திடீரெனத் தோன்றிய இராட்சத பள்ளத்தில் அடுத்தடுத்து வீழ்ந்த கார்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-07

சாலையில் திடீரெனத் தோன்றிய இராட்சத பள்ளத்தில் அடுத்தடுத்து வீழ்ந்த கார்கள்


வடக்கு சீனாவின் ஹார்பின் பகுதியில் உள்ள பிரதான சாலையொன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இராட்சதப் பள்ளத்தில் அவ்வழியாகச்சென்ற கார்கள் வீழ்ந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் சுமார் 86 சதுர அடி அளவிற்கு இராட்சதப் பள்ளம் ஏற்பட்டது.

திடீரென உருவான பள்ளத்தால், அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன சாரதிகள் செய்வதறியாது திணறினர். 

இதில் ஒரு கார் பள்ளத்தில் வீழ்ந்தது. 

அதைத்தொடர்ந்து வந்த காரின் சாரதியும் பள்ளத்தைக் கவனிக்காததால், முன் சக்கரங்கள் பள்ளத்திற்குள் பாய்ந்த பிறகு பிரேக்கை அழுத்த அது பலனில்லாமற்போனது.

மூன்றாவது கார் சாரதி சற்று முன்னதாகவே பிரேக்கை அழுத்த அவரது கார் சக்கரங்கள் பள்ளத்திற்குள் பாயாமல் தடுக்கப்பட்டது. 

பள்ளத்தில் வீழ்ந்த கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த பள்ளம் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages