கலைஞர் மு. கருணாநிதி காலமானார் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-07

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், கலைஞர் மு. கருணாநிதி தமது 94 ஆவது அகவையில் காலமானார்.

மாலை 6.10 அளவில் உயிர் பிரிந்ததாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வௌியிட்டுள்ளது.

மு. கருணாநிதி சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக 11 நாட்களுக்கு முன்னர் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக வைத்தியசாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1924 ஆம் ஆண்டு பிறந்த கலைஞர் மு.கருணாநிதி 5 தடவைகள் தமிழகத்தின் முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages