150 ஆண்டுகளுக்கு பிறகு 77 நிமிடங்கள் நீடிக்கப்போகும் கிரகணம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-12

150 ஆண்டுகளுக்கு பிறகு 77 நிமிடங்கள் நீடிக்கப்போகும் கிரகணம்

150 ஆண்டுகளுக்கு பிறகு 77 நிமிடங்கள் நீடிக்கப்போகும் கிரகணம் 


150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் blue moon eclipse என அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் எதிர்  வரும் 31ஆம் திகதி தோன்றவுள்ளது. 

2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.

இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். 

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இது போன்ற முழு கிரகணம் 1866ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி  தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages