ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-13

ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிப்பு

ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிப்பு



ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது
ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஷிடேனின் ஷிடேன். 

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பாசிலோனா அணிக்கெதிரான போட்டியில் தனது சொந்த மைதானத்தில் 0-4 என ரியல் மட்ரிட் தோல்வியடைந்ததால் ரபெல் பெனிடெஸ் நீக்கப்பட்டு ஷிடேன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

ஷிடேன் தலைமையில் ரியல் மட்ரிட் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது. 

ஷிடேன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின் ரியல் மட்ரிட் 10-ல் 6 கோப்பையை வென்றுள்ளது.

2017-ல் ரியல் மட்ரிட் லா லிகா, சம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது. 

ஆனால் தற்போது 2017-18 பருவகாலத்தில் ரியல் மட்ரிட் அணியின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. 

இந்த லா லிகா பருவத்தில் பார்சிலோனாவிற்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் 0-3 எனத் தோல்வியடைந்ததுடன், 16 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இதனால் ஷினேடின் ஷிடேன் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் இன்று ஷிடேனின் ஷிடேன் ஒப்பந்தத்தை ரியல் மட்ரிட் அணி 2020 வரை நீடித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages