ஜனாதிபதியினால் பாகிஸ்தான் வர்த்தக, கைத்தொழில் கண்காட்சி திறப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-13

ஜனாதிபதியினால் பாகிஸ்தான் வர்த்தக, கைத்தொழில் கண்காட்சி திறப்பு

ஜனாதிபதியினால் பாகிஸ்தான் வர்த்தக, கைத்தொழில் கண்காட்சி திறப்பு
  


பாகிஸ்தான் வர்த்தக, கைத்தொழில் கண்காட்சியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் (12) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.


பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் பாகிஸ்தான் வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

பொறியியல்துறை, வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள், விவசாய உபகரணங்கள், ஆடைகள், மருந்துப் பொருட்கள், உணவு, ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன், பாகிஸ்தானில் பௌத்த மரபுரிமைகளை எடுத்துக்காட்டும் விசேட காட்சிக் கூடமொன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறும். இக்கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காட்சிக் கூடங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது இலங்கை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஷஹீத் அஹ்மத் ஹஸ்மத்தினால் ஜனாதிபதிக்;கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க, பீ.ஹரிசன், றிஷாத் பதியுதீன், அர்ஜுனா ரணதுங்க, தயா கமகே, கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages