இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-23

இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்

இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்



பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.

அந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்­கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.  
மொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்­து­வ­ரப்­ப­டு­கி­றது. இலங்கை வரும் பிபா கிண்­ண­மா­னது நாளை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­டவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8 மணி­முதல் 2 மணி­வரை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மா­நாட்டு மண்­ட­பத்தில் பொது­மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­ப­ட­வுள்­ளது.
அதன்­பி­றகு குறித்த கிண்­ண­மா­னது மாலை­தீ­வுக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.
இதன்­படி, குறித்த வெற்றிக் கிண்­ணத்தை உல­கிற்கு அறி­முகம் செய்யும் சந்­தர்ப்பம் முதற்­த­ட­வை­யாக இலங்­கைக்கு கிடைத்­துள்­ளது. 
உலகில் உள்ள சுமார் 1.5 மில்லயன் மக்களுக்கு பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும் இந்த வாய்ப்பை முதல் முறையாக இலங்கை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 1,500 இலங்கையருக்கு நேரடியாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages