இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-08

இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை



இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். 

இங்கு வீடொன்றை வெறும் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அழகிய ஓலோலாய் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது அங்கு வசித்து வருகின்றனர். 
அதோடு, அக்கிராமத்தில் குழந்தை பிறப்பு வீதமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். 

பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பலர் தொடர்ந்து ஓலோலாய் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓலோலாய் மேயர், மக்கட்தொகை குறைவதைத் தடுக்க அதிரடியாக 2015 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

பொதுமக்கள் வெளியேறியதால் பாழடைந்து பூட்டியே கிடக்கும் 200 வீடுகளை தலா 1 யூரோவிற்கு விற்பனை செய்வதாக அறிவித்தார்.


இந்த வீடுகளை வாங்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குள் வீட்டை சரிசெய்து குடியேற வேண்டும். 

5 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம்.

2017 ஆம் ஆண்டு இறுதிவரை உலகம் முழுவதும் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

”ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதே எனது முதல் வேலை. 

கடந்த காலத்தைப் போல் இங்கு மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். 

எங்கள் நகரம் சாவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்காக இங்கு வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 

மீண்டும் வலிமைமிக்க கிராமத்தைக் கட்டமைப்போம்’ என ஓலோலாய் மேயர் எபிசோ அர்போ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages