1st Test - Day 04: பங்களாதேஷ் 81/3; 119 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-04

1st Test - Day 04: பங்களாதேஷ் 81/3; 119 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்

1st Test - Day 04: பங்களாதேஷ் 81/3; 119 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இன்றைய நாள் (03) ஆட்டத்தை 504 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி , 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது.

இதன் மூலம் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக பெற்ற 513 ஓட்டங்களை விட இலங்கை அணி 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இன்றைய ஆட்டத்தின் போது தனது அறிமுக போட்டியிலேயே சதம் பெறும் வாய்ப்பை ரொஷென் சில்வா பெற்றுக் கொண்டார். 

அது தவிர தினேஷ் சந்திமால் 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பங்களாதேஷ் அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் இறுதி விக்கெட் உட்பட  4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸ்
இலங்கை 713/9 (d) (199.3)
தனஞ்சய டி சில்வா 196
குசல் மெண்டிஸ் 173
ரொஷேன் சில்வா 109
தினேஷ் சந்திமால் 87
தைஜுல் இஸ்லாம் 4/219
மெஹ்தி ஹசன் மிராஸ் 3/174

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் (03) ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் தமீம் இக்பால் 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத், குசல் பெரேரா, லக்‌ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

பங்களாதேஷ் 81/3 (26.5)
தமீம் இக்பால் 41
இம்ருல் கைஸ் 19
மொமினுல் ஹக் 18*
முஸ்பிகுர் ரஹீம் 02
லக்‌ஷான் சந்தகன் 1/3
குசல் பெரேரா 1/20
ரங்கன ஹேரத் 1/22

நாளை போட்டியின் இறுதி நாளாகும் என்பதோடு, 119 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ள பங்களாதேஷ் அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages