சிரிய நாட்டவர் அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி நீடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-04

சிரிய நாட்டவர் அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி நீடிப்பு

சிரிய நாட்டவர் அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி நீடிப்பு


சொந்த நாட்டில் சிவில் யுத்தம் நீடிப்பதால் குறைந்த 18 மாதங்களுக்கு சுமார் 7000 சிரிய அகதிகள் அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகள் அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கான பாதுகாப்பு அந்தஸ்து காலம் எதிர்வரும் மார்ச் மாதம் காலாவதியாகவிருக்கும் நிலையில் அமெரிக்க நிர்வாகத்தின் இந்த முடிவு ஆறுதலை ஏபடுத்தியுள்ளது. இதன்படி அவர்கள் 2019, செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“சிரிய அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிப்பது கட்டாயம் என கவனமாக ஆராயப்பட்ட பின்னர் என்னால் முடிவு எடுக்கப்பட்டது” என்று உள்நாட்டு பாதுகாப்பு திணைக்கள செயலாளர் கிறிஸ்ட்ஜன் நீல்சன் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய யுத்தம் வெடித்து ஓர் ஆண்டுக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகம் சிரிய நாட்டவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி இருக்க வழங்கிய பாதுகாப்பு அந்தஸ்தே வரும் மார்ச் மாதம் காலாவதியாகிவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages