ஹொங்கொங்கில் மற்றுமொரு உலகப் போர் காலத்து குண்டு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-04

ஹொங்கொங்கில் மற்றுமொரு உலகப் போர் காலத்து குண்டு

ஹொங்கொங்கில் மற்றுமொரு உலகப் போர் காலத்து குண்டு


ஹொங்கொங்கின் இதயப்பகுதியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது உலகப் போர் காலத்து குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இதனால் கடந்த புதன்கிழமை ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு கடைகள் மூடப்பட்டன.

பரபரப்பான வான் சாய் மாவட்டத்தை மூடிய பொலிஸார் அங்கு செயற்படும் படகுச் சேவையும் இடைநிறுத்தப்பட்டது. குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை புதன்கிழமை இரவு முழுவதும் இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக செயலிழக்க செய்யப்பட்ட 450 கிலோகிராம் கொண்ட இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு இருந்த அதே கட்டுமானத் தளத்திலேயே இந்த குண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை மாலை ஹோட்டல் வாடிக்கையாளர்கள், குடியிருப்பாளர்கள், பணியாளர்கள் என்று 4,000க்கும் அதிகமானவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். சூழவிருக்கும் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்த இரு குண்டுகளும் அமெரிக்க தயாரிப் குண்டுகள் என்பதோடு இரண்டாம் உலகப் போர் காலத்தில் வீசப்பட்டுள்ளன. 

1941இல் ஜப்பான் மற்றும் பிரிட்டன் கூட்டணிக்கு இடையில் உக்கிர மோதல் இடம்பெற்ற ஹொங்கொங்கில் வெடிக்காத யுத்த காலத்து வெடிகுண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் கண்டுமான பணியாளர்களால் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages