ரயில்வே சட்­டங்­களை மீறி­ய­வர்­க­ளுக்கு நடந்த கதி.! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-23

ரயில்வே சட்­டங்­களை மீறி­ய­வர்­க­ளுக்கு நடந்த கதி.!




Share
ரயில்வே திணைக்­கள பய­ணச்­சீட்டு  பரி­சோ­­கர்­­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் பரி­சோ­­னை­­ளின்­போது, ரயில்வே சட்­­திட்­டங்­­ளுக்கு மாற்­­மான முறையில் ரயில்­களில் பிர­யாணம் செய்த பலர் கைது செய்­யப்­பட்டு, அவர்­­ளி­­மி­ருந்து 20 மில்­லியன் ரூபாவை அப­ராதத் தொகை­யாகத் திரட்ட முடிந்­­தாக, ரயில்வே வாணிப அத்­தி­யட்­சகர் ஜீ.டபிள்யூ. சிசிர குமார தெரி­வித்­துள்ளார்

கடந்த ஆண்டு இறுதிப் பகுதி வரை கொழும்பு உள்­ளிட்ட பல்­வேறு ரயில்வே வல­யங்­களில் 14809 சோதனை நட­­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­­தா­கவும், தொடர்ந்தும் இவ்­வாண்டும் திடீர்ப் பரி­சோ­­னைகள் விரி­வாக்­கப்­பட்­டுள்­­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்

டிக்கட் வாங்­காமல் பய­ணித்­தமை, மூன்றாம் வகுப்பு டிக்­கட்­டுக்­­ளுடன் முதலாம், இரண்டாம் வகுப்புப் பெட்­டி­களில் பய­ணித்­தமை, டிக்­கட்டில் குறிப்­பிட்ட தூரத்­திற்கு அப்பால் பய­ணித்­தமை போன்ற குற்­றங்­­ளுக்­கா­கவே இவர்கள் கைது செய்­யப்­பட்டு குறித்த அப­ராதத் தொகை பெறப்­பட்­­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்

ரயில்வே திணைக்­கள  வரு­மா­னத்தைப் பெருக்கும் நோக்கில், ரயில்வே அப­ராதத் தொகை­களும் தற்­போது அதி­­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 2,500 ரூபா­வாக இருந்த அபராதம், 3 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே வாணிப அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages