விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிளோட்டப் போட்டி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-01

விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிளோட்டப் போட்டி


இலங்கை விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாகவும் நடத்தப்படும் விமானப் படை சைக்கிளோட்டப் போட்டியானது நாளை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை விமானப் படை இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியானது நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடத்தப்படும் இப்போட்டியின் நோக்கம் சைக்கிளோட்டப் போட்டியாளர்களிடையே போட்டித் தன்மையை ஏற்படுத்துவதாகும்.

விமானப் படையின் 67 வது நிறைவு விழாவுக்கு இணைந்ததாக நடத்தப்படும் சைக்கிளோட்டப் போட்டிக்காக இலங்கையின் முன்னணி சைக்கிளோட்ட வீரர்கள் 150க்கும் அதிகமானோரும் மற்றும் இலங்கை சைக்கிளோட்ட சங்கத்தில் பதிவுசெய்த போட்டியாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் ஆண்கள் சைக்கிளோடடப் போட்டியின் முதலாவது நாளான நாளை (02) கொழும்பிலிருந்து புத்தளம் வரை 124.9 கி. மீற்றர் தூரம் வரையும் , இரண்டாவது கட்டம் நாளை மறுதினம் (03) பாலாவிலிருந்து ஹிங்குராக்கொட வரையான 172.6 கி. மீ. தூரதும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 04 ஆம் திகதி பொலநறுவையிலிருந்து ஆரம்பமாகி அம்பாறை வரையான 149.9 கி.மீ தூரம் சென்று அம்பாறை இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்துக்கு அருகில் நிறைவடையவுள்ளது. இப்போட்டியின் மொத்தத் தூரம் 445.9 கிலோ மீற்றராகும்.

04 ஆம் திகதி பெண்களுக்கான ஒரு போட்டி 65.2 கிலோமீற்றர் தூரம் அளவில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகில் ஆரம்பமாகி அம்பாறை இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்துக்கு முன்னாள் நிறைவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு குழுவின் முகாமையாளருக்கும் நாளொன்றுக்கு போனஸ் கொடுப்பனவாக 2000 ரூபாவுக்கும் அதிகமாக வழங்கப்படவுள்ளது. 

இவ்வாறு ஆறாவது தடவையாகவும் விமானப் படையால் போனஸ் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages