தேசிய சிறிய நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்காக கூட்டுக் கடன் திட்டங்களை விரைவில் அமுலாக்குமாறு ஜனாதிபதி உத்தரவு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-01

தேசிய சிறிய நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்காக கூட்டுக் கடன் திட்டங்களை விரைவில் அமுலாக்குமாறு ஜனாதிபதி உத்தரவு


தேசிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் உதவும் வகையில் கூட்டு கடன் திட்டங்கள் அடங்கிய பரந்த வேலைத் திட்டத்தை விரைவில் அமுலாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்தார். 


தேசிய பொருளாதார பேரவை பொருளாதார மறுமலர்ச்சி கருதி 100 கூட்டுக் கடன் திட்டங்கள் என்ற வேலைத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இது பற்றி அரச வங்கிகளின் தலைவர்களோடு ஜனாதிபதி நேற்று கலந்துரையாடினார். 


சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களையும்இ வர்த்தகர்களையும் ஊக்குவித்து உள்நாட்டு கைத்தொழில்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த திட்டம் இன்னும் சில மாதங்களுக்குள் அமுலாகும்.   

இது பற்றிய அறிக்கையொன்றை இரு வாரங்களுக்குள் தமக்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.


அரச வங்கிகள் ஈட்டும் இலாபம் எந்தளவுக்கு மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை ஆராய வேண்டும். 

இந்த நலன்கள் முறையான பொருளாதார நடைமுறையின் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கும் கிடைப்பது அவசியமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 


தொழில் முயற்சியாளர்கள் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளையும்இ உத்தரவாத ஆவணங்கள் பற்றிய சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். 

இந்த சிக்கல்களை சமாளிக்கும் வகையில் எளிதாக கடன்பெறக்கூடிய பின்புலத்தை ஏற்படுத்துவது முக்கியமானதென ஜனாதிபதி சுட்டிக்காட்;டினார்;.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages