ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவுபடும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-04-04

ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவுபடும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


ஆப்பிரிக்கக் கண்டம் பிளவுபடும் வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவலொன்றை வௌியிட்டுள்ளனர்.

கென்யாவில் நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு இதற்குக் காரணமாக அமையும் என நம்பப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வால் கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தது.

இந்த நில அதிர்வைத் தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே சிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுக்களாகப் பிரித்துள்ளது.

இந்நிலையில், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து 

அதிகரித்துக்கொண்டே போகும் பட்சத்தில், ஆப்பிரிக்க கண்டம் இரண்டாகப் பிளவுபட வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ராயல் ஹாலோவே தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages