நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-04-04

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்



தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா (81) காலமானார்.

உடல்நலக்குறைவால் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நெட்கேர் மில்பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

மண்டேலாவுடன் 38 ஆண்டுகள் வாழ்ந்த வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார்.

நெல்சன் மண்டேலா – வின்னி மண்டேலா தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்த காலகட்டத்தில், அவரது அரசியல் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தார் வின்னி மண்டேலா.

கருத்து வேறுபாடு காரணமாக, மண்டேலாவும், வின்னியும் 1992 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages