இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-05-24

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பலி



இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேஷின் நஹன் மாவட்டத்திலுள்ள அரச பாடசாலை மாணவர்களே இதனால் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடங்களை விடவும் இந்த வருடத்தில் நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக மாவட்டத்தின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan ) தெரிவித்துள்ளார்.

நிபாவின் இறப்பு சதவீதம் 70 ஆக உள்ளதுடன், தடுப்பு மருந்துகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இது விலங்குகளில் இருந்து மனிதருக்கு பரவக்கூடியதென அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதல் 10 இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள அபாயகரமான நோய்த்தொற்றுக்களில் நிபா வைரஸும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages