வவுனியா வைத்தியசாலையில் மூன்று நாட்களாக குழந்தையின் சடலம் : தவிக்கும் தந்தை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-07

வவுனியா வைத்தியசாலையில் மூன்று நாட்களாக குழந்தையின் சடலம் : தவிக்கும் தந்தை


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களாக தனது குழந்தையின் சடலத்தின் பிரதேசப்பரிசோதனையினை பல்வேறு காரணங்கள் கூறி வைத்திருப்பதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக பெற்றோர் குழந்தையினை முச்சக்கரவண்டி மூலம் மாமடு அரச வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

எவ்வித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படாது குழந்தையினை அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் மேலதிக சிகிச்சைக்காக  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  எடுத்து சென்றனர். 

பின்னர் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை அன்றையதினம் 11.00மணியளவில் உயிரிழந்தது.

பிரேதப்பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டதுடன் அன்றையதினம் மதியம் மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை பொலிஸாரின் விசாரணை மற்றும் பிரதே பரிசோதனைகளின் பின்னர் எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும் ஞாயிற்றுக்கிழமை  திடீர் மரண விசாரணை அதிகாரியினை பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என பொலிஸார் குழந்தையின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நேற்று திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு தனது அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.

எனினும் ஜெ.எம்.ஒ வைத்தியர் விடுமுறை காரணமாக இன்றைய தினமே குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இடம் பெறும் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் குழந்தையின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் மூன்று நாட்கள் கடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages