கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-07

கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையின் டொக்டர் அரவிந்தன் செல்வராஜ் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 18-ஆம் திகதி காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி குழாயை மாற்றிவிட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே கருணாநிதி வீடு திரும்பினார்.

கடந்த ஜூலை 26-ஆம் திகதி கருணாநிதிக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. அவரின் சிரை வழியே மருந்துகள் செலுத்தப்பட்டன.

கடந்த ஜூலை 28-ஆம் திகதி அதிகாலையில் கருணாநிதிக்கு திடீரென இரத்த அழுத்தம் குறைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இவரின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று கலந்துள்ள போதிலும், ஜூலை 29-இல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நலம் சீரானது. 

கடந்த 2ஆம் திகதி கருணாநிதியின் இரத்த இயக்கங்களைச் சீராக்கும் முயற்சியாக அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவிலிருந்து கருணாநிதியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மருத்துவர்கள் தொடர் முயற்சி: கடும் நோய்த்தொற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டதாகவும் இரத்த தட்டணுக்கள் குறைந்து அதற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அவரின் நாடித் துடிப்பிலும் திங்கள்கிழமை காலை தொய்வு ஏற்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால், கருணாநிதிக்குச் செலுத்தப்படும் மருந்துகள் மெதுவாகவே செயல்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages