பிரபல மாடல் சோம்பி பாய் – ரிக் ஜெனெஸ்ட் தற்கொலை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-08-07

பிரபல மாடல் சோம்பி பாய் – ரிக் ஜெனெஸ்ட் தற்கொலை



சர்வதேச அளவில் பிரபல மாடலாக புகழ்பெற்ற சோம்பி பாய் (Zombie Boy) என்று அழைக்கப்படும் ரிக் ஜெனெஸ்ட் (Rick Genest) தற்கொலை செய்துகொண்டார்.

31 வயதான ரிக் ஜெனெஸ்ட் கனடாவைச் சேர்ந்தவர். கனடாவிலுள்ள மாண்ட்ரீ நகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு ஒரு சோம்பியின் தோற்றத்தில் மாடலிங் உலகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரிக் ஜெனெஸ்ட், லேடி காகா போன்ற பிரபல பாப் பாடகர்களின் ஆல்பத்திலும் தோன்றியுள்ளார்.

ரிக் ஜெனெஸ்ட் குறித்து லேடி காகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ரிக் ஜெனெஸ்ட்டின் இந்த மரணம் பேரழிவைத் தாண்டிய வலியைக் கொடுத்துள்ளது. 
நாங்கள் இங்கு நிலவும் கலாசாரத்தை மாற்ற முயற்சித்தோம். மனம் சார்ந்த உளவியலை முன்னிலைப்படுத்தி கொண்டுவர வேண்டும்.

 இதனைப் பேசக் கூடாது என்ற களங்கத்தை நாம் அழிக்க வேண்டும். நீங்கள் கஷ்டப்படுவதாக உணர்ந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். 

நாம் தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages