Oppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் - Today News

Today News

Today News

Breaking News

W

2019-01-01

Oppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்


ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில நிமிடங்களில் தமது தொலைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள பாவனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Fast charging தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் OPPO நிறுவனம் முன்னோடியாக திகழ்வதுடன் இதன் புதிய SuperVOOC Flash Charge ஊடாக ஒரு வீதம் முதல் 100 வீதம் வரை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள R17 Pro வில் காணப்படும் சிறந்த உள்ளம்சங்களில், புகழ்பெற்ற Ultra Night Mode க்கு மேலதிகமாக Super VOOC Flash Charge வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம், 2018 இல் ஸ்மார்ட்ஃபோன்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 

Fast charging தொழில்நுட்பத்துக்கான புதிய அடையாளமாக இது அமைந்துள்ளதுடன், நவீன வாழ்க்கை மாற்றத்துக்கமைய இதுவும் அமைந்துள்ளது.

VOOC  என்றால் என்ன? 

VOOC (Voltage Open Loop Multi-step Constant-Current Charging) என்பது OPPO இலெக்ட்ரொனிக்ஸினால் வடிவமைக்கப்பட்டுள்ள வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமாகும். VOOC Flash Charge விசேடமான adapter மற்றும் கேபள்கள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்கதிகமாக வெப்பமேறல் தவிர்க்கப்படுவதுடன், பாதுகாப்பான வகையில் 25W  இல் சாதனங்கள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இது 2014 இல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 2018 இல் SuperVOOC அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

Super VOOC என்றால் என்ன?
SuperVOOC என்பது OPPO வின் VOOC Flash Charge தொழில்நுட்பமாகும். இதில் புத்தாக்கமான bi-cell பற்றரி வடிவமைப்பு பயன்படுத்தப்படுவதுடன் ஆகக்கூடிய சார்ஜ் வலுவான 50W ஐ அண்மித்த மின்னோட்டம் வழங்கப்படுகிறது.

SuperVOOC Flash Charge ஊடாக ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இது சாதாரண சார்ஜ் செய்யும் வேகத்தை விட சுமார் நான்கு மடங்கு வேகம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Fast charging எந்தளவு வேகமானது?

இன்றைய கால கட்டத்தில் காணப்படும் பெருமளவான ஸ்மார்ட்ஃபோன்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்படுவதற்கு 2 மணித்தியாலங்கள் வரை தேவைப்படுகிறது. 

பல தொலைபேசிகளில் fast charging இனால் 75 வீதம் வரை காலம் துரிதப்படுத்தப்படுவதுடன் 100 வீதத்தை எய்துவதற்கு அதிகளவு காலம் எடுக்கும். OPPO SuperVOOC இனால் 35 நிமிடங்களில் 100 வீதம் சார்ஜ் செய்யப்படுகிறது. துறையில் காணப்படும் ஏனைய சார்ஜ் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக வேகமானது.

அதிகளவு வலுவை பயன்படுத்தும் யிpகள் பாவனையிலுள்ள போது, பல ஸ்மார்ட்ஃபோன்கள் மெதுவாகவே சார்ஜ் ஆகின்றன. வீடியோக்கள் பார்வையிடல் அல்லது கேம்கள் விளையாடுதல் போன்றவற்றை ஒரே வேளையில் மேற்கொள்ளும் போது கூட SuperVOOC இனால் துரித கதியில் தொலைபேசி சார்ஜ் செய்யப்படும்.

Fast charging பாதுகாப்பனதா? 
VOOC மற்றும் SuperVOOC fast charging ஆகியன பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Five-core பாதுகாப்பினூடாக ஸ்மார்ட்ஃபோன்களை பாதுகாப்பான வகையில் பயன்படுத்துவதற்கு வழியேற்படுத்தப்படுவதுடன், குறைந்தளவு மின்னோட்ட கட்டமைபின் காரணமாக தொலைபேசி அல்லது சார்ஜர் அளவுக்கதிகமாக வெப்பமடைவது தவிர்க்கப்படுகிறது. இந்த Fast charging கட்டமைப்புகள் பற்றரி ஆயுள் காலத்தில் மறைத்தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை.
VOOC எதிர் SuperVOOC

OPPO தனது Fast-charging தொழில்நுட்பத்தை VOOC இலிருந்து Super VOOC க்கு மெருகேற்றம் செய்துள்ளது. ஏனைய Fast-charging தொழில்நுட்பங்கள் துரித சார்ஜ் செய்யும் வேகங்களை எய்துவதற்கு உயர் மின்னோட்டங்களை பயன்படுத்துவதுடன் VOOC அதிகளவு அம்பியரில் தங்கியுள்ளது. 

2018 ஒக்டோபர் மாதம் வரையில், Super VOOC இனால் வேகமான fast-chargeவசதி சந்தையில் வழங்கப்பட்டிருந்தது.

VOOC க்கு Micro-USB cable தேவைப்படுவதுடன் Super VOOC க்கு USB Type-C பயன்படுத்தப்படுகிறது. 2018 ஸ்மார்ட்ஃபோன்களுடன் பொருந்தும் வகையில் இந்த சார்ஜ் தொழில்நுட்ப மாற்றம் அமைந்துள்ளது. 

Super VOOC இனால் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் bi-cell வடிவமைப்பு போன்றன பயன்படுத்தப்படுகின்றன. ஓப்பீட்டளவில் சாதாரண VOOC இனால் R15 Pro ஐ 50 வீதம் வரை சார்ஜ் செய்வதற்கு 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

முழுமையான சார்ஜ் செய்வதற்கு 90 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது. இது Super VOOC இல் மேம்படுத்தப்பட்டுள்ளது. VOOC இனால் 30 நிமிடங்களில் அரைப் பங்கு சார்ஜ் செய்யும் அதேவேளை, Super VOOC இனால் இதே காலப்பகுதியினுள் தொலைபேசியை ஏறத்தாள முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Super VOOC Charging எவ்வாறு செயற்படுகிறது?
சாதாரண சார்ஜர் ஒன்றின் மூலமாக தொலைபேசி ஒன்றை தொடர்ச்சியாக சீரான வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். இது அதிகளவு காலத்தை எடுக்கும். Fast charging தொழில்நுட்பங்களினூடாக அதிகளவு வலுவை துரிதமான வழங்க முடிவதுடன், பற்றரி குறிப்பிட்ட கொள்ளளவை எய்தியவுடன் அந்த வழங்கலை இடைநிறுத்துகிறது.

முதல் தலைமுறை VOOC  சார்ஜிங் ஊடாக சார்ஜ் செய்யப்படும் வேகம் 5V/4A  ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், 20W ஐ வழங்கியிருந்தது. அதாவது தொலைபேசியின் 60 வீத பங்கு அரை மணி நேரத்தினுள் சார்ஜ் செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Super VOOC என்பது OPPO இனால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப அம்சமாக அமைந்துள்ளது. குறிப்பாக OPPO R17 Pro போன்ற உயர்மட்ட தொலைபேசியில், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல்களுக்கு மேலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புத்தாக்கமான அங்கமாக அமைந்துள்ளது. இதனூடாக இன்றைய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் OPPO வை தனித்துவமாக திகழச் செய்ய உதவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages