மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-20

மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு


கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தெரிவான அங்கத்தவர்கள் நேற்று  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள். 
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

சத்தியப்பிரமாண வைபவம் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் நேற்று  அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

அவர்கள் முன்னிலையில் 60 பேர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகத் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்திட்டத்தை அமுலாக்க வேண்டும். 

மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோயை ஒழிப்பதும் அவசியம். 

தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் தத்தமது தொகுதிகளில் சிறப்பாக கடமையாற்ற வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக சத்தியப்பிரமாணம் செய்த கொண்ட ரோஷி சேனாநாயக்கவும் உரையாற்றினார். 

ஐக்கிய தேசியக் கட்சி 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages