அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-07

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்பு


வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றுள்ளார். 

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். 

ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். 

இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நேற்று மதியம் நடைபெற்றது.

 அதற்கு சில மணிநேரத்திற்கு முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி வாஷிங்டன் நகரில் பேரணியாக சென்றனர். அவர்கள் கவனாக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஓட்டெடுப்பில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தது.

இதனால் டிரம்பின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுதியளித்து. இதனையடுத்து 53 வயது நிறைந்த பிரெட் கவனாக் நேற்றிரவு அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டார். 

வருகிற நவம்பர் 6-ம் தேதி இடைக்கால தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கவனாக் உச்சநீதிமன்ற நீதிபதியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது டிரம்பிற்கும் மற்றும் அவரது ஆளும் குடியரசு கட்சிக்கும் கிடைத்த அரசியல் வெற்றியாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages