சீரற்ற காலநிலையால் 237,940 குடும்பங்களைச் சேர்ந்த 803,516 பேர் பாதிப்பு ; 5 பேர் பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-07

சீரற்ற காலநிலையால் 237,940 குடும்பங்களைச் சேர்ந்த 803,516 பேர் பாதிப்பு ; 5 பேர் பலி




Share
நாட்டில் தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் மக்­களின் இயல்­பு­வாழ்க்கை பாதிப்­­டைந்­துள்­ளதுடன் 237,940 குடும்­பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­­தோடு ஐவர் பலி­யா­கி­யுள்­ளனர்

இவை தவிர மண்­­ரிவு மற்றும் வெள்ளம்  கார­­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­­டைந்­துள்­­துடன் 1,046 வீடுகள் பகு­தி­­ளவில் சேத­­டைந்­துள்­­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது
இந்த சீரற்ற கால­நிலை அடுத்த சில தினங்­­ளுக்கும் தொடரும் என்­பதால்   மலைப்­பாங்­கான மற்றும் சரி­வுகள் ஏற்­படும் அறி­கு­றிகள் தென்­படும் பகு­தி­களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் விழிப்­புடன் இருப்­பது அவ­சி­­மாகும் என இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.
அதி­­ரிக்கும் மழை­வீச்­சியின் கார­­மாக பல பாகங்­களில் நீர்த்­தேக்­கங்­­ளிலும் நதி­­ளிலும் நீரின் அளவு அதி­­ரித்து வரு­கின்­றது. இவ்­வாறு நீர் மட்டம் அதி­­ரித்­தாலும் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இது­­ரையில் ஏற்­­­வில்லை
நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டங்­களும் சடு­தி­யாக அதி­­ரித்­தி­ருக்­­வில்­லை­யென தெரி­விக்­கப்­­டு­கின்­றது.

இந்த கால­நி­லை­யினால் தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லை­­ளிலும் பல விபத்து சம்­­வங்கள் பதி­வா­கி­­தோடு அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் பய­ணிக்கும் சார­திகள் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் அவர்கள் மணிக்கு 60 கிலோ­மீற்றர் வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­து­மாறும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் பரா­­ரிப்பு மற்றும் திட்­­மிடல் பணிப்­பாளர் எஸ்.ஓப்­­நா­யக்க  அறி­வு­றுத்­தி­யுள்ளார்.
இதே­வேளை, நாட்டின் பல பாகங்­களில் நேற்று பெய்த கடும் மழை­யினால் கொழும்பு உள்­ளிட்ட பல நக­ரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி கேசரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரிவித்தார்
இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages