30 வருடமாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட விலையுயர்ந்த விண்கல் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-08

30 வருடமாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட விலையுயர்ந்த விண்கல்




Share
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்றை வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். 

இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார். அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மை குறித்து ஆராயும் படி கூறினார்.

சுமார் 10 கிலோ எடையுள்ள அந்த கல்லை மோனா சிர்பெஸ் ஆய்வு மேற்கொண்ட .போது அதில் அந்த நபர் கொடுத்தது வினோதமான விண்கல் என தெரியவந்தது.

1930 ஆம் ஆண்டுகளில் அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது ஆய்வு முடிவை உறுதி செய்ய மோனா அந்த கல்லை வொஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைத்தார். அது விண்கல் என அந்த மையம் உறுதி செய்தது.

 மேலும் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளது.

பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது சிறப்பு அம்சமாகும்.

இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.

தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் விரும்புகிறார்.

விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages