வீட்டிலேயே கிடைக்கும் வெட்சிப் பூவினது மருத்துவ குணங்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-15

வீட்டிலேயே கிடைக்கும் வெட்சிப் பூவினது மருத்துவ குணங்கள்



வெட்சிப்பூ ஆனது வீட்டிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்ந்த பூக்களில் ஒன்றாகும். இவற்றின் இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. இவை உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது.

வெட்சிப்பூ தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள், வெட்சிப்பூ மற்றும் பனங்கற்கண்டு ஆகியவையாகும். 

முதலில் பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு வெட்சி பூவை அதில் போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். 

இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் குணமாகும். உடல் அசதி இருக்கும் போது இத் தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.

மாதவிலக்கு பிரச்சனை, உடல் சூடு ஆகியவற்றை போக்கும் மருந்தை தாயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் வெட்சி பூ, மோர் ஆகியவையாகும். 

வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்சனை குணமடையும்.

தோல் பிரச்சனைகளான அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு தேவையான பொருட்கள், வெட்சி பூ, தேங்காய் எண்ணெய் ஆகியவையாகும்.

 ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை  எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். 

இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது.

வெட்சி பூ இலைகளை பசையாக்கி பூசுவதால் அடிபட்ட வீக்கம் வற்றிப்போகும். தசை சிதைவு, நரம்புகளில் சிதைவு, ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு ஆகியவற்றை குணமாக்கும் அற்புத மருந்தாகவும் இந்த பசை

காணப்படுகின்றது. முருங்கை பட்டையை சிதைத்து அதனுடன் சிறிது கடுகு சேர்த்து கலந்து பூசிவர மூட்டுவலி குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages