அதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323 - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-21

அதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323


இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மயரின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு மேற்கிந்தியத் தீவு அணியின் தலைவர் ஜோசன் ஹொல்டரை பணித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்தியத் தீவு அணியின் கிரென் பவுல் மற்றும் ஹேம்ரஜ் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர மேற்கிந்திய அணி 4.3 ஆவது ஓவரில் 19 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் விக்கெட்டின பறிகொடுத்தது.

அதற்கிணங்க ஹேம்ரஜ் ஒன்பது ஒட்டத்துடன் ஷமியினுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ஷெய் ஹோபுடன் கிரென் பவுல் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி வந்தார். 

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 59 ஓட்டங்களை பெற்றது.

பவுல் 34 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் 15 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வர 13.1 ஆவது ஓவரில் பவுல் 36 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடங்களலாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது ஒன்பதாவது அரை சதத்தை பூர்த்தி செய்து, 14.5 ஆவது ஓவரில் கலீல் அஹமட்டின் பந்து வீச்சில் தவானிடம் பிடிககொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிம்புகுந்த சாமுவேல்ஸும் வந்த வேகத்திலேயே எதுவித ஓட்டங்களுமின்றி 2 பந்துகளை எதிர்கொண்டு சாஹலுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 
இவரையடுத்து ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடி வந்த ஷெய் ஹோப்பும் 21.4 ஆவது பந்தில் 32 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து நான்காவது விக்கெட்டுக்காக சிம்ரான் ஹெட்மயர் மற்றும் ரோவ்மன் பவுல் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சுக்களை அனைத்து திசைகளிலும் அடித்தாடி மேற்கிந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேக அதிகரித்தது. தொடர்ந்து 26.4 ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த ஹெட்மயர் 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

அதன் பின்னர் ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்து மறுமுணையில் துடுப்பெடுத்தாடி வந்த ரோவ்மன் பவுல் 30.3 ஆவது பந்து வீச்சில் 22 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து அணித் தலைவர ஹோல்டர் களமிம் புகுந்தாட மேற்கிந்திய அணி 33 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையிலிருந்தது. 

போட்டியில் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஹெட்மயர் 74 ஆவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசி 6 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் அவர் ஜடேஜாவினுடைய பந்து வீச்சில் 106 ஓட்டத்துடன் 38.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அவரையடுத்து ஆடுகளம் நுழைந்த ஆஷ்லே நர்ஸும் இரண்டு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மேற்கிந்திய அணி 39.3 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 252 ஓட்டத்தை பெற்றது.

ஆஷ்லே நர்ஸுன் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய தேவேந்திர பிஷோவுடன் ஜோடி சேர்ந்தாடி வந்த அணித் தலைவர் ஜோசன் ஹொல்டரும் 38 ஓட்டத்துடன் சஹாலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து கேமர் ரோச் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை கடந்தது.

இறுதியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை 30 நான்கு ஓட்டங்கள், 9 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 322 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 323 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

ஆடுகளத்தில் தேவேந்திர பிஷோ 22 ஓட்டத்துடனும், கேமர் ரோச் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கலீல் அஹமட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages