ஷெய் ஹோப்பின் அதிர்ச்சி வைத்தியம் ; போட்டி சமநிலையில் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-25

ஷெய் ஹோப்பின் அதிர்ச்சி வைத்தியம் ; போட்டி சமநிலையில்


Share
மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷெய் ஹோப் இறுதிப் பந்தில் விளாசிய நான்கு ஓட்டத்தினால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

 விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. 

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 157 ஓட்டத்தையும், ராயுடு 73 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

322 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரேன் பவுல் மற்றும் சந்திரபோல் ஹெம்ராஜ் ஆகியோர் களமிறங்கி ஆடிவர 36 ஓட்டங்களை பெற்றபோது முதல் விக்கெட்டினையும் 64 ஓட்டத்தை பெற்றபோது இரண்டாவது விக்கெட்டினையும் மேற்கிந்திய அணி பறிகொடுத்தது.

அதற்கிணங்க கிரேன் பவுல் 6.1 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன் மெஹமட் ஷெமியின் பந்து வீச்சுலும், 9.3 ஆவது ஓவரில் சந்திரபோல் ஹெம்ராஜ் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சுலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து சிம்ரன் ஹெட்மேயர் மற்றும் ஷெய் ஹோப் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கி வான வேடிக்கை காட்ட மேற்கிந்திய அணியின் ஓட்டம் வேகமாக அதிகரிதத்தது.

20 ஓவர்களுக்கு 126 ஓட்டங்களை அணி பெற்றுக் கொள்ள அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த ஹெட்மேயர் 23.4 ஆவது ஓவரில் 41 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

 மறுமுணையில் இவருக்கு தோள் கொடுத்து துடுப்பெடுத்தாடி வந்த ஷெய் ஹோப்பும் 28.4 ஆவது ஓவரில் 64 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசினார்.

இதனையடுத்து மேற்கிந்திய அணி 29.3 ஆவது ஓவரில் 203 ஓட்டங்களை பெற்றது. எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 221 ஆக இருந்தபோது அதிரடி ஆட்டத்தினால் வான வேடிக்கை காட்டி வந்த சிம்ரன் ஹேட்மேயர் 64 பந்துகளில் 7 ஆறு ஓட்டம், 4 நன்கு ஓட்டம் உள்ளடங்களாக 94 ஓட்டத்துடன் சஹாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நாழுவ விட்டார்.

இவரின் வெளியேற்றத்தையடுத்து ஆடுகளம் நுழைந்த ரோவ்மன் பவுலும் 37.3 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகரித்தது. 

எனினும் அந்த உற்சாகத்தை ஷெய் ஹோப் அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ஜோசன் ஹொல்டருடன்  இணைந்து துடுப்பெடுத்தாடி தகர்த்தெறிந்தார். 

அதன்படி ஷெய் ஹோப் 45.1 ஆவது ஓவரில் 113 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ய, மேற்கிந்திய அணி 47 ஓவருக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.

இதனால் மேற்கிந்திய அணியின் வெற்றிக்கு 18 பந்துகளுக்கு 22 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருக்க 47.2 ஆவது ஓவரில் அணித் தலைவர் ஹோல்டர் அநாவசியாமன முறையில் ரன்அவுட் முறையில் 12 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் வெளியேற்றத்தையடுத்து அஸ்லி நர்ஸ் களம்புகுந்தாடி வர அவரும் 49.4 ஆவது ஓவரில் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெற்றிக்கான அதிர்ஷ்டம் இந்திய அணி வசம் திரும்பியது.

இறுதியாக 2 பந்துகளுக்கு 7 ஓட்டம் என்ற நிலையும், அதையடுத்து 1 பந்துக்கு 5 ஓட்டம் என்ற நிலையும் இருக்க, ஷெய் ஹோப் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி போட்டியை சமநிலைப்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ஆடுகளத்தில் ஷெய் ஹோப் 134 பந்துகளை எதிர்கெ ாண்டு 10 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 123 ஓட்டத்துடனும், கேம் ரோச் எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. 

பந்து வீச்சில் இந்திய  அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சமி, சஹால் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages