நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது... வெளிப்பகுதி கரை தொட்டது! - Today News

Today News

Today News

Breaking News

W

2018-11-15

நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது... வெளிப்பகுதி கரை தொட்டது!

இன்று இரவு 11.30 மணிக்கு நாகை அருகே கரையை கடக்கிறது கஜா- வீடியோ

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கு கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

 இதன் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. 

கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாகை அருகே இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறிய நிலையில், அந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட கஜா புயல் திசை மாறி, கடலூர் மற்றும் பாம்பன் நடுவே வியாழக்கிழமையான இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages