1st Test: SLvENG; ஹேரத்தின் இறுதிப்போட்டி; இங்கிலாந்து துடுப்பாட்டம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-11-06

1st Test: SLvENG; ஹேரத்தின் இறுதிப்போட்டி; இங்கிலாந்து துடுப்பாட்டம்


சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (6) காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன் படி இங்கிலாந்து அணியில்..
கீடொன் ஜென்னிங்ஸ், ரோரி பர்ன்ஸ்,மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ஆதில் ரஷீத், சாம் குர்ரான், ஜெக் லீச், மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்திவ்ஸ், திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, தில்ருவன் பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டி இலங்கை ரசிகர்களுக்கும் இலங்கை கிரிக்கட் அணிக்கும் முக்கியமான போட்டி என்றால் மிகையாகாது. காரணம் இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் ரங்கன ஹேரத் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து ஒய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக முத்தையா முரளிதரனின் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணியின் பல வெற்றகளுக்கு காரணமாக ஹேரத் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னனி இடது கை சுழல் பந்து வீச்சாளராக உள்ள ஹேரத் கடந்த வருடம் உலகில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய இடது கைப் பந்து வீச்சாளராக டேனியல் விட்டோரியை பின்தள்ளி முதலித்திற்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களில் ஹேரத் கனிசமான பங்களிப்பு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. 

குறிப்பாக 2014 உலக T20 போட்டியின் காலிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியை வெறும் 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார் ஹேரத்.

மேலும் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வீழ்த்தி முதன் முதலாக வெள்ளையடிப்புச் செய்த அணியாக இலங்கை முத்திரை பதித்த இப்போட்டிகளில் ரங்கன ஹேரத் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் ஹெட்ரிக் விக்கட்டுக்களையும் பதிவு செய்திருந்தமை சிறப்பம்சமாகும்.

கடந்த வருடம் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டியொன்றில் 2-0 எனும் கணக்கில் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் இரண்டாவது தாய் வீடாக கருதும் ஐக்கிய இராச்சியத்தில் வைத்து வீழத்தியதில் ஹேரத் உலகின் தலை சிறந்த வீரராக உலக அரங்கில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்கார்ரான ஹேரத் தனது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages