கென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2019-09-22

கென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்


கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை வரிக்குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை வரிக்குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது நான் தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரிகளுக்கு பதில் வரிக்குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வு நோக்கத்திற்காக அதன் மீது வண்ணம் தீட்டப்பட்டிருக்கலாம் என கருதியதாக தெரிவித்தார். 

மரபணு குறைபாடு காரணமாக வரிக்குதிரைக்கு நிறமியில் மாற்றம் ஏற்பட்டு 'PSeudo melanin' என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என ஆன்டனி தெரிவித்துள்ளார்.

தற்போது கென்யா விலங்கியல் சரணாலயத்தில் வளர்ந்து வரும் இந்த அரிய வகை வரிக்குதிரையை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு சென்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages